விளையாட்டு

ஒரு மனுஷன் கடைசி ஓவரில் இந்த அடியா அடிக்கிறது!! அடி ஒன்னும் மரண அடி!! கதிகலங்கிப்போன பெங்களூரு!!

Summary:

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி வீரர்கள் ருதுராஜ் மற்றும் டுப்ளசிஸ் இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, சென்னை அணி சற்று தடுமாறியது. 20 ஓவர்களில் 160 ரன்கள் கடப்பதே கேள்விக்குறியானநிலையில், மொத்த ஆட்டத்தையும் புரட்டிப்போட்டது கடைசி ஓவர். ஆம், பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் சென்னை அணி வீரர் ஜடேஜா ருத்ரதாண்டவம் ஆடினார்.

கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 37 ரன்கள் அடித்து சென்னை அணியின் எண்ணிக்கையை 191 ஆக உயர்த்தினார். கடைசி ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள், இரண்டு ரன், கடைசியில் ஒரு பவுண்டரி என மொத்தம் ஒரே ஓவரில் ஜடேஜா 37 ரன்கள் அடித்தார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்துள்ளது. 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது. ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் அடித்துள்ளார். அதில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.


Advertisement