பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
கொஞ்சம் கூட யோசிக்கல... சுட்டிப்பையன் சார் இந்த ஜடேஜா..! போட்டிக்கு பிறகு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய துவங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர்கள் மளமளவென சரிந்து 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய நிலையில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
— pant shirt fc (@pant_fc) November 5, 2021
நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ரவீந்திர ஜடேஜா. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஜடேஜாவிடம், ஆப்கானிஸ்தான் அணியால் நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு சற்றும் யோசிக்காமல் ரவீந்திர ஜடேஜா, வேறு என்ன.?மூட்டை முடிச்சை கட்டி கொண்டு ஊருக்கு போக வேண்டியது தான் என பதிலளித்துள்ளார்.