ஐபில் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம் தெரியுமா? முழு விவரம் இதோ!

ஐபில் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம் தெரியுமா? முழு விவரம் இதோ!


ipl-t20-2020-latest-points-table-update

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஐபில் 2020:

இதுவரை 22 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. மிகவும் பரபரப்பாக போட்டி நடந்துவரும் நிலையில் ஐபில் கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்/ இந்நிலையில் தற்போதைய புள்ளி விவரம் குறித்து பார்ப்போம்.

Ipl 2020

தெறிக்கவிடும் மும்பை - பறக்கவிடும் டெல்லி:
இந்த ஐபில் சீசனில் மிகவும் வலுவாய்ந்த அணியாக மும்பை மற்றும் டெல்லி அணி உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இதில் ரன் ரேட் அடிப்படையில் மும்மை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

முன்னேறும் ஹைதராபாத் அணி:
ஐபில் தொடக்கத்தில் புள்ளி படையலில் கடைசி இடத்தில் இருந்த ஹைத்ராபாத் அணி, தனது தொடர் வெற்றியால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, 6 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் மூன்றது இடத்தில் உள்ளது.

போட்டிபோடும் கொல்கத்தா மற்றும் பெங்களூரு:
வெற்றி தோல்வி என மாறி மாறி ஆடி வரும் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் தலா 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஒருமுறை கூட ஐபில் கோப்பையை கைப்பற்றாத பெங்களூரு அணி இந்தமுறை ஐபில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிவருகிறது.

Ipl 2020

சென்னை சூப்பர் கிங்ஸ்:
தோனி தலைமையிலான சென்னை அணி இந்த ஐபில் சீசனில் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

தடுமாறும் ராஜஸ்தான், பஞ்சராகும் பஞ்சாப்:
தொடக்கத்தில் ஏறுமுகத்துடன் ஆரம்பித்த ராஜஸ்தான் அணி, தனது தொடர் தோல்விகளால் தற்போது நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. தோல்விகளை மட்டுமே சந்தித்துவரும் பஞ்சாப் அணி 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

Ipl 2020