விளையாட்டு

ஐபில் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம்? முழு விவரம் இதோ!

Summary:

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இதுவரை 32 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெரும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகளுக்கு இடையிலான போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

தற்போதுவரை உள்ள புள்ளி பட்டியலில் 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள மும்பை அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அதே 12 புள்ளிகளுடன், ரன்ரேட்டில் சற்று குறைவாக டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3 வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இதனை தொடர்ந்து தலா 6 புள்ளிகளுடன் ஹைதராபாத், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் புள்ளி பட்டியலில் 5 , 6 மற்றும் 7 வது இடத்தில் உள்ளது.

நான்கு புள்ளிகளை பெற்றுள்ள பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.

 


Advertisement