இந்தியா விளையாட்டு

கையில் தண்ணீர் பாட்டிலுடன் இருக்கும் இவர் யார்னு தெரியுதா? பிரபல ஐபில் வீரரின் வருங்கால மனைவி! யார் அந்த வீரர் தெரியுமா?

Summary:

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் T20 போட்டியின் முதல் சுற்று ஆட்டம் ஏறக்குறைய முடிவடைய இருக்கும்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. சென்னை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.

மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் நிலையில் இந்த மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் நான்காவது இடத்திற்கு கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் தங்கள் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுஒருபுரம் இருக்க, ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் மனைவி மற்றும் காதலி மைதானத்திற்கு நேரில் சென்று  அவர்களை உற்சாகப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அவரின் வருங்கால மனைவி, மைதானத்திற்கே சென்று உற்சாகப்படுத்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. ஆர்.சி.பி அணியின் சுழற்பந்து வீச்சாள்ர் சாஹல் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள இவரின் பெயர் தனஸ்ரீ வெர்மா.

அதேபோல் ஆர்.சி.பி அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி தான்யா வாத்வா ஆகியோரின் படமும் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement