இந்தியா விளையாட்டு

ஐபிஎல் ஏலம்: கோடிகளில் புரளும் இந்திய வீரர்கள்; அதிர்ச்சியில் யுவராஜின் ரசிகர்கள்.!

Summary:

ipl players yalam athirchil yuvraj fans

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 12 வது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு ஜெய்ப்பூரில் என்று இன்று நடைபெறுகிறது.

இதில் இந்திய வீரர் ஜெயதேவ் உனட் கட்டை அதிகபட்சமாக 8.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Related image

பஞ்சாப் அணி முகமது சமியை  4.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

லசித் மலிங்காவை 2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ்ம், இஷாந்த் ஷர்மாவை 1.10 கோடி மற்றும் அக்சர் படேலை 5 கோடிக்கு டெல்லி கேப்பிடல் அணியும் ஏலம் எடுத்துள்ளது

சென்ற வருடம் ஐபிஎல் போட்டிக்காக யுவராஜ் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் அவர் அந்த சீசனில் சரியாக ஆடவில்லை. 8 போட்டிகளில் ஆடி வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Related image

இந்த நிலையில் இந்த ஐபில் போட்டிக்காக இன்று நடக்கும் ஏலத்தில் அவர் பெயரும் ஏலம் விடப்பட்டது. அவரது குறைந்தபட்ச தொகை 1 கோடி ரூபாய் ஆகும். ஆனால் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாடுகளில் நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டிகள் எங்கு  நடைபெறும் என்ற முடிவு  இறுதியாக தேர்தல் ஆணையம் கையில் தான் உள்ளது.


Advertisement