சிஎஸ்கே அணிக்கு சவாலாக தான் லக்னோ அணிக்கு பெயரா.? கிளம்பும் புதிய சர்ச்சை.!!
ஐபிஎல் 2020 இல் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. RPSG குழுமத்தின் தலைவர் சஞ்சிவ் கோயங்கா ‘லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்’ என்று அணியின் பெயரை வெளியிட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15ஆவது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது. இந்த தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன.
புதிதாக கலந்து கொண்ட லக்னோ அணி தங்களுக்கு புது பெயர் ஒன்றை பரிந்துரைக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டது. இதில் பல ரசிகர்கள் லக்னோ நவாப்ஸ் என்ற பெயரை தேர்வு செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் லக்னோ அணி சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சவால் விடும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற பெயரை சூட்டியுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சஞ்சிவ் கோயங்கா, ரசிகர்கள் தான் இந்த பெயரை சூட்டினார்கள் என்றும், அணிக்கு வழக்கம் போல் ஆதரவு அளித்து ஆசிர்வதியுங்கள் என்று கூறினார்.
சஞ்சிவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷ் கோயங்காவுக்கு தோனி என்றாலே பிடிக்காது. இதனால் சிஎஸ்கேவை குறிவைக்கும் விதமாகவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.