இந்தியா விளையாட்டு

4 வது வெற்றி யாருக்கு 'தல தோனியா-அஸ்வினா' பரபரப்பான இன்றைய சென்னை-பஞ்சாப் போட்டி.!

Summary:

ipl-2019---18th-leek---csk-vs-kxip---dhoni---ashwin

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது 11 சீசன் நிறைவடைந்து வெற்றிகரமாக 12 வது சீசன் ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் தங்களது திறமையை ஏதாவதொரு வகையில் வெளிக்கொணர்வதால்  நடைபெறும் அனைத்து போட்டியும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை 17 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 18வது லீக் போட்டியாக சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று மாலை 4 மணி அளவில் ஆரம்பமாக உள்ளது. இரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பதிவு செய்து சமமான நிலையில் உள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை வெற்றி பெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் தல தோனியின் மாஸ்டர் பிளான் கனகச்சிதமாக அமைந்தது. ஆனால் மும்பை அணிக்கு எதிரான கடைசி போட்டியில் துவக்கத்தில் நன்றாக பந்துவீசிய சிஎஸ்கே அணி கடைசி 2 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இதனால் கடைசி கட்டங்களில் பந்துவீச்சில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டால் வெற்றிவாய்ப்பு எளிதாக அமையும். அதே நேரம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பங்கேற்ற 4 போட்டியில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் சென்னையை விட ஒரு இடம் மேலே (3 வது இடம்) உள்ளது.

இரு அணிகளும் சம பலம் கொண்ட இன்று மோதுவதால் இன்றைய போட்டி சுவாரசியமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேவேளையில் இக்கட்டான நிலையில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் அஸ்வின் தனது மங்கெட் பிளானை செயல்படுத்தவும் தயங்கமாட்டார் என்ற ஐயம் சென்னை ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.


Advertisement