இச்சே.. நூலிழையில் மிஸ் ஆன தல தோனியின் முயற்சி; என்ன தெரியுமா?

இச்சே.. நூலிழையில் மிஸ் ஆன தல தோனியின் முயற்சி; என்ன தெரியுமா?


ipl 2019 - 18th leek - csk vs kxip - csk win

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் வேலையில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. 18 வது போட்டியான இந்த ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற சென்னை அணி கடந்த போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.

இதனால் நேற்றைய ஆட்டத்தில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2019

161 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.

நேற்று ஜடேஜா வீசிய 12.4வது ஓவரில் கே.எல்.ராகுல் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படாமல் அருகில் சென்றது. அப்போது ராகுல் ரன் எடுக்க முயற்சி செய்தார். அதே சமயம் தோனி பந்தை எடுத்து திரும்பிப் பார்க்காமல் ஸ்டெம்பில் எறிந்தார். 

பந்து சரியாக ஸ்டெம்பில் பட்டு விளக்கு எரிந்தது. ஆனால் ஸ்டெம்பின் மேல் இருக்கும் பெய்ல்ஸ் கீழே விழவில்லை. பந்து ஸ்டெம்பில் படும் போது கிட்டத்தட்ட 2 அடி தூரம் ராகுலின் பேட்டிற்கும் கிரீஸிற்கும் இடையே இருந்தது. இதனால் கே.எல்.ராகுல் அதிர்ஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுக்காமல் தப்பினார்.