யாருங்க அவரு..! இந்திய பேட்ஸ்மேனை பார்த்து மிரண்டுபோன பேட்டிங் கோச்.. வைரலாகும் வீடியோ..

யாருங்க அவரு..! இந்திய பேட்ஸ்மேனை பார்த்து மிரண்டுபோன பேட்டிங் கோச்.. வைரலாகும் வீடியோ..



Indian team batting coach talks about Rishap Pand reverse sweep shot

ரிஷப் பண்ட் ஆர்ச்சர் பந்தில் ஆடிய ரிவர்ஸ் ஸ்வீப்பை பார்த்து தான் அசந்துபோனதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது. ஆனாலும் இங்கிலாந்து அணியின் வெற்றியை விட அந்த போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் ஆர்ச்சர் பந்தில் ஆடிய ரிவர்ஸ் ஸ்வீப்பை பற்றித்தான் பிரபலங்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இப்படி ஒரு பேட்டிங்கை இதுவரை பார்த்ததே இல்லை என முன்னாள் வீரர்கள் பீட்டர்சன், யுவராஜ் சிங், விவிஎஸ் லக்ஷ்மணன் உள்ளிட்ட பல வீரர்கள் புகழ்ந்து பேசி இருந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸர் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், "பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ் ஸ்வீப் மாதிரியான ஷாட்களை ஆடுவார்கள். ஆனால், ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அசத்துகிறார்.

அதுவும் 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடி, அந்த பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டதை பார்த்து நான் ஆச்சரியத்தில் அசந்து போனேன்” என பங்கார் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக நான்காவது டெஸ்ட் போட்டியில் பண்ட், ஆண்டர்சன் வேகத்தில் இதேபோல ஒரு ஷாட் ஆடி பவுண்டரி அடித்ததும் குறிப்பிடத்தக்கது.