பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி! இடையிடையே பெய்த மழையில் நடந்தது என்ன..!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறை மற்றும் 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட் ஜோடிக்கு இவரும் இணைந்து 113 ரன்கள் எடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து இருந்த நிலையில் 23ஆவது ஓவரில் தவான் தனது விக்கெட்டை இழந்தார்.
24 ஓவர்கள் முடிவுற்ற போது மழை குறுக்கிட்டதால் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆட்டம் தடைபட்டது. 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடரப்பட்ட ஆட்டத்தில் 36 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 98 ரன்னிலும் சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அதற்கு முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்னிலும் சூரியகுமார் யாதவ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஆட்டம் தடைபட்டது. எனவே அத்துடன் இந்திய அணியின் ஆட்டம் முடிக்கப்பட்டு டக் வொர்த் லீவிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 35 ஓவர்களில் 257 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின் பேட்டிங்கை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 26 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை பிராண்டன் கிங் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிகபட்சமாக தலா 42 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் சாகல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை இந்திய அணியின் சுப்மன் கில் கைப்பற்றினார்.