தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
எங்க ஏரியா உள்ள வராதே..! செம்ம மாஸ் காட்டிய இந்திய அணி.!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலந்து அணி, அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் 134 ரன்களில் அணைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அஸ்வின் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது இந்திய அணி.
இதனையடுத்து இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிறப்பாக பந்து வீசி வரும் அஸ்வின், இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியின் 4ஆம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது .
உணவு இடைவேளைக்கு பிறகும் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்டை இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.