வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
முதல் ஆட்டமே தரமான சம்பவம்.! இங்கிலாந்து அணியை மிரளவைத்த இந்திய அணி.!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாகி வெளியேறினார். இஷான் கிஷன் 8 ரன்களில் வெளியேற, தீபக் ஹூடா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக ஆடினர்.
தீபக் ஹூடா 17 பந்துகளில் 33 ரன்களும், சூர்யாகுமார் 19 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தநிலையில் ஜோர்டான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய சிறப்பாக ஆடி 33 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது.
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் 4 ரன்களிலும், கேப்டன் ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், 19.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.