வெறித்தனமான ஆட்டம்! இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது! ஒட்டுமொத்த தேசத்தையும் கொண்டாட வைத்த சிங்கப் பெண்கள்!!



india-women-win-world-cup-2025

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  தன்னம்பிக்கையுடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனைகள், உலகக்  கோப்பையை கைப்பற்றியதன் மூலம் நாடு முழுவதும் பெருமை சேர்த்துள்ளனர். இந்த வெற்றி, மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் உயர்வை பிரதிபலிக்கிறது.

வரலாற்று வெற்றி: இந்தியாவின் மைல்கல்

நவி மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. இதுவே இந்திய மகளிர் அணிக்கு முதல் உலகக் கோப்பை வெற்றி ஆகும்.

அபார ஆட்டம் காட்டிய தீப்தி ஷர்மா

முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 298 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது. ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா தனது அற்புதமான ஆட்டத்தால் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தார். அவர் 58 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியை 246 ரன்களுக்குள் அடக்கியார்.

இதையும் படிங்க: " அந்த ஷாட் தேவையே இல்ல" என்னோட தப்பு தான்! கண்ணீர் கலந்த நிலையில் தோல்விக்குப் பொறுப்பேற்ற ஸ்மிருதி மந்தனா.!

பிசிசிஐயின் பாராட்டு மற்றும் பரிசு

இந்த வரலாற்று சாதனையை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அணிக்கு ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இது மகளிர் கிரிக்கெட்டில் புதிய நம்பிக்கையை உருவாக்கும் வகையில் முக்கியமான முன்னேற்றமாகும்.

இந்த வெற்றி, 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்றும் கோப்பையை இழந்த இந்திய அணியின் கனவை நனவாக்கியது. உலக அரங்கில் இந்திய பெண்கள் வீராங்கனைகள் எழுதிய இந்த வெற்றி, எதிர்கால தலைமுறைக்கு ஊக்கமாக திகழும் என்பது உறுதி.

 

 

இதையும் படிங்க: ரோஹித் ஷர்மாவின் கண்ணீரும் மகளிர் அணியின் புன்னகையும்! வைரலாகும் ஆனந்தக் கண்ணீர் வீடியோ..!!