பாகிஸ்தானின் தீவிர ரசிகர்; நேற்றைய போட்டியில் இந்தியாவின் ரசிகராக மாறினார். வைரலாகும் வீடியோ!!india-vs-bangladesh---asia-cup-2018

ஆசிய கோப்பைக்கான தொடர் துபாயில் நேற்றுடன் நிறைவடைந்தது இந்தத் தொடரில் இந்தியா,  பாகிஸ்தான்,  இலங்கை,  வங்காளதேசம் ஆப்கானிஸ்தான்  ஆகிய 6 அணிகள் பங்கேற்று விளையாடியது.

சூப்பர்4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்று இருந்தன. இதிலிருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டி இந்தியா பங்களாதேஷ் இடையே நேற்று நடைபெற்றது.

Asia cup 2018

இதற்கு முந்தைய ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் 
5 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய போட்டி இறுதி போட்டி என்பதால் அந்த 5 முன்னணி வீரர்களும் நேற்றைய போட்டியில் இடம்பெற்றனர்.

இதன்படி டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். வங்கதேசம் மணி 48.3 ஓவர்களில் 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  அந்த அணியின் லிடன் டாஸ் 121 ரன்கள் குவித்து அந்த அணிக்கு பெரிதும் உதவினார். 

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி பைனலுக்கு வராத நிலையில் அந்த அணியின் தீவிர ரசிகரான பசீர் சாச்சா இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து இந்திய அணியின் தீவிர ரசிகராக நேற்றைய போட்டியில் மாறினார்.  இந்திய வீரர்கள் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும்போது இந்திய வீரர்களை உர்சாகபடுத்தும் விதமாக தனது ஆதரவினை வெளிப்படுத்தினர்.இந்திய வீரர்கள் தங்கி இருந்த ஓட்டலில் தங்கி இருந்த சாச்சா இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தோனி ஆகியோருடன் புகைப்படம் எடுத்து வெளியிட வெளியிட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் தற்போது இந்திய ஜெர்சி அணிந்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து  இருப்பது வைரலாக பரவி வருகிறது.