தனி ஆளாக போராடி இறுதிவரை ஆட்டமிழக்காத வாஷிங்டன் சுந்தர்.! மொத்த விக்கெட்டுகளையும் தட்டி தூக்கிய இங்கிலாந்து.!
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி 1முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 6 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக சுப்மன் கில் 29 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி 11 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். ரஹானே 1 ரன் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ரிஷப் பன்ட் 91 ரன்களுடனும், புஜாரா 73 ரன்களுடனும் அவுட் ஆகி வெளியேறினர்.
இறுதியில் இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் மட்டும் அற்புதமாக விளையாடிய இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலையான 241 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர உள்ளது.