இந்தியா விளையாட்டு

புஜாரா சதம், சதத்தை தவறவிட்ட கோலி; ரன் மழை பொழியும் இந்தியா; விழிபிதுங்கும் ஆஸ். அணி.!

Summary:

ind vs aus 3ed test 1st innigs day 2

கிறிஸ்துமஸ் நாளுக்கு அடுத்த நாள் போட்டி பாக்ஸிங் டே என வர்ணிக்கப்படுகிறது. 
இப்போட்டி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மெல்போர்ன் பிட்சில் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் படாதபாடு படுகின்றனர்.

நேற்று இந்திய அணிக்கு துவக்க மட்டையாளராக ஹனுமா விஹாரி மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய ஹனுமா விஹாரி( 8 ரன்) எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பிறகு களமிறங்கிய புஜாராவும் அகர்வாலும் தங்களது பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடினர். அறிமுக போட்டியான இப்போட்டியில் மயங்க் அகர்வால் அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 76 ரன்களில் அவுட் ஆனார். அவர் 8 பவுண்டரிகளையும் 1சிக்சரையும் விளாசினார்.

பிறகு விராட் கோலியும் புஜாராவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய  புஜாராவும் அரை சதம் அடித்தார். புஜாரா 68 ரன்களுடனும் விராட் கோலி 47 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றன. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை குவித்துள்ளது.

இரண்டாம் நாளான இன்று டெஸ்ட் போட்டிகளுக்கு உரித்தான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சதம் அடித்தார். சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 82 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு சிறப்பாக ஆடி வந்த புஜாராவும் 106 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். தற்போது அஜிங்கிய ரஹானேவும் ரோகித் சர்மாவும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். முடிவில் இந்திய அணி 128 ஓவர்களில் 308/4 ரன்களை குவித்துள்ளது.


 


Advertisement