
ஐசிசி டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.! முதலிடத்தை நெருங்கிய அஸ்வின்.! ஜடேஜா பின்னடைவு.!
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், மும்பை டெஸ்டில் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் 30 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 5வது இடத்திலும் விராட் கோலி 6வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 883 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 382 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இதிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 360 புள்ளிகளை பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே 2வது இடத்தில் இருந்த ஜடேஜா தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement