ஐபில் ஆரம்பிக்கும் முன்னரே சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட சிக்கல்..!! முக்கிய வீரர் விலகியதால் வருத்தத்தில் ரசிகர்கள்..

ஐபில் ஆரம்பிக்கும் முன்னரே சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட சிக்கல்..!! முக்கிய வீரர் விலகியதால் வருத்தத்தில் ரசிகர்கள்..


hazlewood-exist-from-ipl-2021-for-some-personal-reasons

சென்னை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகி இருப்பது சென்னை அணி ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீசன் 14 ஐபில் T20 போட்டிகள் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்கு அடுத்த நாள் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

ipl t20

போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அடுத்த ஒரு கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் தற்போதில் இருந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதிலும் சென்னை அணி ரசிகர்கள் சற்று கூடுதல் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கடந்த முறை சென்னை அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்ததால் இந்த முறை சென்னை அணி ஐபில் கோப்பையை கைப்பற்றியே ஆகும் என்ற நம்பிக்கை சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை அணியில் இருந்து, மிகவும் அனுபவம் மிக்க ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த வீரரான ஹேசல்வுட் வெளியேறி உள்ளார். தனது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் எனவும், அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி அதிகப்படியான சர்வதே போட்டிகளில் விளையாட இருப்பதால், உடலளவிலும், மனதளவிலும் அதற்கு தயாராக வேண்டும் எனவும் கூறி ஹேசல்வுட் சென்னை அணியில் இருந்து வெளியேறியுள்ளார்..

ipl t20

மிகவும் அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹேசல்வுட் சென்னை அணியில் இருந்து விலகியிருப்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இருப்பினும் சென்னை அணியில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், டுவைன் பிராவோ, டேரன் பிராவோ, லுங்கி இங்கிடி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது சற்று ஆறுதலை தருகிறது.