ஜடேஜா பேருக்கு தான் கேப்டனா...! ஜடேஜாவை கேப்டன்சி செய்ய வழிவிடுங்கள் தோனி..! முன்னாள் சிஎஸ்கே வீரர் சாடல்.!

ஜடேஜா பேருக்கு தான் கேப்டனா...! ஜடேஜாவை கேப்டன்சி செய்ய வழிவிடுங்கள் தோனி..! முன்னாள் சிஎஸ்கே வீரர் சாடல்.!


harpajan talk about dhoni and jadeja

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஜடேஜா கேப்டன்சி செய்யவில்லை, அவருக்கு பதிலாக தோனிதான் கேப்டன்சி செய்து வருகிறார் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஜடேஜாவிற்கு தற்போது மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது, ஆனால் அவரோ பீல்டிங்கின் போது ரிங்கிற்கு வெளியில் நின்றுக்கொண்டு இருக்கிறார் அங்கிருந்து கொண்டு எந்தவொரு கேப்டனாலும் எந்தவொரு விஷயத்தையும் கையாள முடியாது.

இதனால் அவர் தோனிக்கு தான் தலைவலி கொடுக்கிறார். பீல்டிங் ரிங்கிற்கு உள்ளே நிற்கும் தோனி பீல்ட் செட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து பணிகளையும் செய்கிறார். ஒரு அணியின் சிறந்த ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்றால், ஜடேஜா பேசியாக வேண்டும். சென்னை அணி பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இன்னும் மேம்பாடு அடைய வேண்டும், இப்படியிருக்கையில் தோனி ஜடேஜாவிற்கு ஸ்பூனில் ஆலோசனை வழங்குவதை நிறுத்தவேண்டும்,மேலும் ஜடேஜாவை சுகந்திரமாக கேப்டன்சி செய்ய வழிவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.