
ganguly talk about world cup bowler
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. இதனால் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகிய மூன்று சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முகமது ஷமியை மாற்று வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்துவது சரியான முடிவு இல்லை. முகமது ஷமி, ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை சிறப்பாக பந்துவீசி வருகிறார். நான் மட்டும் அணியின் கேப்டனாக இருந்தால், ஷமியை அணியில் ஆடவைப்பேன்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சமீபத்தில் ஆடிய அட்டடங்களில் மோசமாக தான் ஆடினார். எனவே அவரை மாற்று வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement