விளையாட்டு

நேற்றைய போட்டிக்கு நடுவே கடுப்பான விராட்கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..

Summary:

நேற்றைய T20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நடுவரின் தவறான முடிவால் கடுப்

நேற்றைய T20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நடுவரின் தவறான முடிவால் கடுப்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிவரும் நான்காவது T20 போட்டி நேற்று நடைபெற்றது. முன்னதாக நடந்த மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டியிலும், இந்திய அணி 1 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2 - 2 என்று சமன் செய்துள்ளது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. நேற்றைய போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மா 12 பந்துகளில் 12 ரன்கள் அடித்து வெளியேறினார். KL ராகுல் 14 ரன்களில் வெளியேற, கேப்டன் விராட்கோலி 5 பந்துகளில் 1 ரன் அடித்து ஆட்டம் இழந்தார்.

இந்நிலையில் மிகவும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார் சூர்யகுமார் யாதவ். இவர் மிகவும் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து, இந்திய அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் நேற்று விக்கெட் இழந்த முறை பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

சாம் குர்ரான் பந்து வீச்சில், அவர் அடித்த ஷாட், டேவிட் மலானின் கைக்குச் சென்றது. மலான் பந்தை கீழே வைத்தது போல தெரிந்த நிலையில், முடிவு மூன்றாம் நடுவருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, ரீப்ளேயில் பந்து தரையில் படுவது போல தெரிந்த நிலையில், மூன்றாம் நடுவர் அவுட் என அறிவித்தது, அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை பார்த்து கடுப்பான இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மைதானத்தில் இருந்து எழுந்து, மிகவும் கோவமாக தனது கைகளை நீட்டி கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.


Advertisement