கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோ வீட்டில் நேர்ந்த துயரம்! கண்ணீர் மல்க வேதனையுடன் அவரே வெளியிட்ட பதிவு!!football-player-ronaldo-son-dead

கால்பந்து உலகில் மிகப்பெரும் ஜாம்பவானாக விளங்கி வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிகுஸ். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற இரு மகன்களும், ஈவா மற்றும் அலனா என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்டியானோவின் மனைவி ஜார்ஜினா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். 

மேலும் இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரொனால்டோ அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. அதனை தெரிவித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்நாள் எங்களுக்கு மிகவும் வேதனையான நாள். எங்களது ஆண் குழந்தை இயற்கை எய்திவிட்டான். ஒரு பெற்றோராக இந்த மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெண் குழந்தை நன்றாக உள்ளார். அவர்தான் எங்களுக்கு தற்போது மனதைரியத்தைக் கொடுக்கிறார்.

எனது மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், பிற மருத்துவ பணியாளர்களுக்கும் மிக்க நன்றி. நாங்கள் இந்த சூழலில் தனிமையாக இருக்க விரும்புகிறோம். அந்த ஆண் குழந்தையும் எங்களுக்கு தேவதைதான். நாங்களும் அவரை மிகவும் காதலிக்கிறோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.