விளையாட்டு

தோனியை மட்டுமே நம்பினால் போதுமா? சிஎஸ்கே அணியின் நிலை குறித்து ரசிகர்கள் கலக்கம்!

Summary:

Fans mindset about csk team form in ipl

2020 ஐபிஎல் தொடரானது இன்று அபுதாபியில் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை அணியை பொறுத்தவரை ஆரம்பம் முதலே பல சிக்கல்களை சந்தித்துள்ளது. அனுபவ வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங்கின் விலகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இருப்பினும் அவர்களுக்கான மாற்று வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் இதுவரை தேர்வு செய்யவில்லை. எல்லாவற்றையும் தோனி பார்த்துகொள்வார் என அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

வயதான வீரர்கள், அனுபவம் இல்லாத வீரர்கள் தான் இப்போது சிஎஸ்கே அணியில் உள்ளனர். இவர்களை வைத்து சமாளித்துவிடலாம் என்ற தோனியின் எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தோனி என்ன செய்ய காத்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Advertisement