விளையாட்டு

டு பிளசிஸ் பவுண்டரி லைனில் செய்த அசத்தலான காரியம்.! கொல்கத்தா அணியினரை மிரளவைத்த தரமான சம்பவம்.! வைரல் வீடியோ.!

Summary:

டு பிளசிஸ் பவுண்டரி லைனில் செய்த அசத்தலான காரியம்.! கொல்கத்தா அணியினரை மிரளவைத்த தரமான சம்பவம்.! வைரல் வீடியோ.!

2021 ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இதனையடுத்து முதலில் பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக சுப்மான் கில்,  வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.

சுப்மான் கில் 9 ரன்கள் எடுத்தநிலையில், அவுட் ஆகி வெளியேறினார். இதனைத்தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுத்தநிலையில், அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி நிலைத்து நின்று அதிரடியாக ஆடினார். அவர்  33 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் போல்டானார். இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவருகிறது சென்னை அணி. கொல்கத்தா அணி பேட்டிங் செய்தபோது 9வது ஓவரை சென்னை நட்சத்திர பந்து வீச்சாள் ஹஸ்ட்லேவூட் வீசனார். அப்போது பேட்டிங் செய்த இயான் மோர்கன் முதல் பந்தையே பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார். ஆனால் பவுண்டரியில் பீல்டிங் செய்துக்கொண்டிருந்த டு பிளசிஸ், பந்தை எகிறி கேட்ச் பிடித்தார்.

ஆனால், தான் பவுண்டரி லைனை நெருங்குவதை உணர்ந்த டு பிளசிஸ், உடனே கேட்ச் பிடித்த பந்தை மேலே தூக்கி வீசி, ஒரு காலை பவுண்டரி லைனை தாண்டி வைத்து பேலன்ஸ் செய்துவிட் பின் உடனே பவுண்டரி லைனுக்கு உள்ளே வந்து மேலே வீசிய பந்தை லவகமாக மீண்டும் கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement