ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தல்.! அதிர்ச்சி சம்பவம்.!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தல்.! அதிர்ச்சி சம்பவம்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில். இவர் 1998 முதல் 2008ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 4 டெஸ்ட்போட்டிகளில் விளையாடிய மெக்கில் 208 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஷேன் வார்னேவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சில் அதிகமான விக்கெட்டுகளை ஸ்டூவர்ட் மெக்கில் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், ஸ்டூவர்ட் மெக்கில், கடந்த மாதம்அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
ஒரு மறைவான பகுதிக்கு கொண்டுசென்று அவரைத் தாக்கி, மிரட்டியுள்ளனர். இதனையடுத்து மீண்டும் ஒரு பகுதியில் கொண்டுவந்துவிட்டு பின்னர் தப்பிவிட்டனர். இதுதொடர்பாக ஸ்டூவர்ட் மெக்கில் போலீசில் புகார் அளித்தார்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பணத்திற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.