இங்கிலாந்து அணியில் புதிய கேப்டன் அறிவிப்பு.! தொடரில் இருந்து விலகிய இயான் மோர்கன்.!eoin-morgan-ruled-out-of-odi-series-for-injury

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சிறப்பான பேட்டிங்காலும், சிறப்பான பந்துவீச்சாலும் இந்தியா அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Eoin morgan

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இயன் மோர்கன் இந்திய அணிக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தநிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் கேப்டனாக இருப்பார்.