இந்தியா விளையாட்டு WC2019

இங்கிலாந்து அணியின் கடைசி நிமிடம்! தமிழக வீரர் அஸ்வின் வெளியிட்ட வைரல் வீடியோ!

Summary:

england vs new zealand final match

கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. 

அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் இங்கிலாந்து அணி அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் உலக கோப்பையை வென்றது. 

இந்நிலையில் உலக கோப்பையின் பரபரப்பான இறுதி கட்டத்தின் போது, இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் கடைசி ஓவரின் ஒவ்வொரு பந்திற்கும் தலையில் கையை வைத்து எப்படியாவது இங்கிலாந்து அணி ஜெயிக்க வேண்டும் என்று பதட்டத்துடன் இருந்துள்ளார். அந்த னியின் வெற்றி உறுதியானதும், துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை அங்கிருந்த தமிழக வீரர் அஸ்வின் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement