விளையாட்டு

சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தை புரட்டி போட்ட பாக்கிஸ்தான்.. இங்கிலாந்து ஆல்-அவுட்!

Summary:

England all out for 219 in first innings

இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி துவங்கிய இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாக்கிஸ்தான் அணி 326 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டத்திலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பாக்கிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணரினர். இங்கிலாந்து அணியின் போப் மட்டும் 62 ரன்கள் எடுத்தார்.

70.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாக்கிஸ்தான் அணியின் யாசிர் 4, அப்பாஸ் மற்றும் சதாப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Advertisement