கண்களால் சிக்னல் கொடுத்த விராட்கோலி!! சொன்னதுபோல் அடுத்த பந்தில் விக்கெட்!! வைரலாகும் வீடியோ இதோ..

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது அடுத்த பந்தில் விக்கெட் விழப்போவதை விராட் கோலி முன்பே கண


Eng vs India Viratkholi wicket prediction viral video

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது அடுத்த பந்தில் விக்கெட் விழப்போவதை விராட் கோலி முன்பே கணித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்சில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 65.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா 4 விக்கெட், முகமது ஷமி 3 விக்கெட், ஷர்துல் தாகூர் 2 விக்கெட் மற்றும் முகமது சிராஜ் 1 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்துவருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 54-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். அப்போது இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளை பும்ரா மிக சிறப்பாக வீசியநிலையில், பும்ரா 5 வது பந்தை வீசுவதற்கு முன்பாக விராட்கோலி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை அலெர்ட் செய்தார்.

இந்த பந்தில் விக்கெட் விழப்போகிறது என்பதுபோல் விராட்கோலி ரிஷப் பந்தை அலெர்ட் செய்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.