விளையாட்டு

உலககோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர்

Summary:

Dminy retires from odi

தென் ஆப்பிரிக்கா அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக இருந்து வரும் ஜேபி டுமினி வரும் 2019 உலககோப்பையுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

உலக ஆரங்கில் கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்பவர், தென் ஆப்பிரிக்காவின் ஜேபி டுமினி. இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக பலமுறை வெற்றியை தேடித் தந்துள்ளார். 

இதுவரை 193 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள டுமினி 5047 ரன்களும் 68 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் இவரது சராசரி 37.39. வரும் உலககோப்பை டுமினிக்கு மூன்றாவது உலககோப்பை தொடராகும். 

ஒருநாள் போட்டியில் டுமினி, 2013 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு 122 பந்துகளில் 150 ரன்கள் அடித்தது தான் அதிகபட்சமாகும். மேலும் அயர்லாந்திற்கு எதிராக 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலககோப்பையுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டுமினி அறிவித்துள்ளார். ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற டுமினி தொடர்ந்து T20 போட்டிகளில் மட்டும் ஆடப்போலதாக அறிவித்துள்ளார். 


Advertisement