மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
வாய்ப்புகளை தவறவிடும் தினேஷ் கார்த்திக்; பண்ட் அறிமுகமாக அதிக வாய்ப்பு
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது.
இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் காயம் ஏற்பட்டதால், கடந்த ஒரு மாதக் காலமாக ஓய்வில் இருக்கிறார். லார்ட்ஸ் டெஸ்ட் தொடங்கும்போது பும்ரா தயாராகிவிட்டார். ஆனால், காயம் முழுவதுமாக குணமடைய வேண்டும் என்று இந்திய நிர்வாகம் அவரை களம் இறக்கவில்லை.
சனிக்கிழமை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் டிரென்ட் பிரிட்ஜ் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. இதனால் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு பும்ராவை களம் இறக்க வாய்ப்புள்ளது. பும்ரா தென்ஆப்பிரிக்கா தொடரின்போது 3 போட்டியில் 14 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார்.
டெஸ்ட் அணியின் ரெகுலர் விக்கெட் கீப்பரான சகா காயம் அடைந்ததால் தினேஷ் கார்த்திக் நீண்ட காலத்திற்குப் பிறகு வாய்ப்பு பெற்றார். ஆனால் 0, 20, 1, 0 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் அவருக்கு மாற்று விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரிஷப் பந்த் முதல் தர போட்டியில் 54.50 சராசரி வைத்துள்ளார். இதில் நான்கு சதங்களும், 8 அரைசதங்களும் அடங்கும். அத்துடன் 19 வயதில் முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடியது. அப்போது ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.