மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
நேற்றைய போட்டியில் பவுலரை மோசமான வார்த்தையில் திட்டிய தினேஷ் கார்த்திக்! வைரலாகும் வீடியோ.
நேற்றைய போட்டியின் போது கொல்கத்தா அணி வீரர் தினேஷ் கார்த்திக் பவுலரை மோசமான வார்த்தையால் திட்டிய காட்சி தற்போது வைரலாகிவருகிறது.
மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி மும்பை அணியை வெற்றிபெற செய்தனர்.
மும்பை அணி சார்பாக டிகாக் 78 ரன்களும் பாண்டியா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்த நிலையில் 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து மும்பை அணி 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டியின் நடுவே கொல்கத்தா அணி வீரர் வரும் சக்கரவர்த்தி பந்து வீசியபோது கீப்பிங் நின்ற தினேஷ் கார்த்திக் பவுலரை மோசமான வார்த்தையால் திட்டிய ஆடியோ தற்போது வைரலாகிவருகிறது.
டிக்காக்கு எதிராக வரும் சக்ரவர்த்தி ஷார்ட் பிட்ச் பந்தை வீசிய நிலையில், வருண் சக்ரவர்த்தியை நோக்கி தினேஷ் கார்த்திக் “என்ன ம***று பந்து” இது என்று திட்டுகிறார். தினேஷ் கார்த்திக் தமிழில் திட்டும் ஆடியோ ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இந்த ஆடோயோவை கேட்ட பலரும் தினேஷ் கார்த்திக்கின் செயலுக்கு எதிராக விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.