
Dhoni retirement from one day match soon
இந்திய அணியின் முன்னாள் கேப்டான் தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிஎன்என் நியூஸ் 18-க்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளது தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் இணைந்த தோனி தனது சிறப்பான ஆட்டத்திலும், சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை, T20 போட்டிக்கான உலகக்கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். கூல் கேப்டன் என்ற பெருமையுடன் இருக்கும் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி தனது ஓய்வை அறிவித்தார். தற்போது ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மட்டும் விளையாடிவரும் தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தோனியே முடிவு செய்வார் என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.
கடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தோனி இதுவரை எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருப்பது தோனி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement