எப்படியாவது ஒரே ஒரு டைம்.!! 2100 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து காத்திருக்கும் தோனியின் ரசிகர்..dhoni-fan-traveled-2100-kilo-meter-by-cycle-to-take-pho

தோனியுடன் புகைப்படம் எடுப்பதற்காக 2100 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்து, சென்னை வந்துள்ள ரசிகர் ஒருவரின் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தோனி ரசிகர்

உலகளவில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் தோனியின் ரசிகர்கள் ஏராளம். மைதானத்தில் அவரை எப்படியாவது பார்த்துவிடவேண்டும், அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் அனைவர்க்கும் ஆசை இருக்கும். அதற்காக சிலர், போட்டி நடைபெறும்போது மைதானத்திற்குள் சென்று அவரை கட்டிப்பிடிக்கும் காட்சிகளை பார்த்திருப்போம்.

dhoni

இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரரான கௌரவ் என்பவர் தோனியுடன் ஃபோட்டோ எடுக்காமல் டெல்லி திரும்ப மாட்டேன் என டெல்லியிலிருந்து சைக்கிளில் சென்னை வந்து, சேப்பாக்கம் மைதானம் அருகே டெண்ட் அமைத்து தங்கியுள்ளார்.

இதையும் படிங்க: சச்சினின் இந்த வாழ்நாள் சாதனையை அசால்டாக உடைத்த சாய் சுதர்சன்!! புதிய சாதனை..

2100 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம்

26 நாட்களாக சைக்கிளில் பயணித்து சுமார் 2100 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்துள்ளார் கௌரவ். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தடைந்த அவர், தோனி தங்கியிருந்த நட்சத்திர விடுதி அருகே சென்று, அங்கு பேருந்தில் இருந்து தோனி இறங்குவதை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார். இருப்பினும் அவரால் தோனியை நெருங்கி புகைப்படம் எடுக்க முடியவில்லை.

dhoni

தோனியுடன் புகைப்படம் எடுத்தே ஆகவேண்டும்

இருந்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜாஸ்தான் ராயல்ஸ் அணி மோதிய போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி, மைதானம் வரை சென்றும் அவரால் தோனியுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும், தனது முயற்சியை கைவிடாத அவர், 24ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் பிளே ஆஃப் அல்லது 26 ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் தோனியை ஏற்ப்படியாவது சந்தித்து அவருடன் போட்டோ எடுக்காமல் டெல்லி திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே டெண்ட் அமைத்து தங்கியுள்ளார்.

இதையும் படிங்க: நிறைவேறாமலே போய்விடுமா தோனியின் ஆசை? அதுமட்டும் நடந்தால் நிச்சயம் உறுதி..