விளையாட்டு

மைதானத்தில் பிட்ச் சரி செய்யும் பணியில் ஈடுபடும் தோனி..! வைரலாகும் வீடியோ.!

Summary:

Dhoni driving pitch cleaning vehicle video goes viral

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டான் தோனி இதுவரை எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. சுமார் 8 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத தோனி அடுத்தமாதம் தொடங்க இருக்குக்கும் ஐபில் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.

ஐபில் போட்டிகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் 20-20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. ஆகவே, ஐபிஎல்லில் தோனி சிறப்பாகா விளையாடினாள் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனி இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐபில் போட்டிகளை முன்னிட்டு தோனி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதனிடையே, ஜார்க்கண்ட் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி செய்ய வந்த தோனி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பிட்சை சரி செய்யும் உருளை போன்ற வாகனத்தை ஓட்டி மகிழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement