எளிதான கேட்சை தவறவிட்ட தோனி.! கடுப்பான பந்துவீசிய ஜடேஜா.! வைரல் வீடியோ

எளிதான கேட்சை தவறவிட்ட தோனி.! கடுப்பான பந்துவீசிய ஜடேஜா.! வைரல் வீடியோ


dhoni-catch-missed-jadeja-over

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், சன்ரைசர்ஸ் அணியும் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் விளையாடி கொண்டிருந்தபோது அவருக்கு ஜடேஜா பந்துவீசினார், பந்தானது பேட்டில் உரசி கீப்பர் தோனியிடம் சென்றது. ஆனால் எளிதான அந்த கேட்சை தோனி பிடிக்காமல் தவறவிட்டார். இதனால் அதிருப்தியடைந்தார் ஜடேஜா, தலையில் கை வைத்தபடி அதனை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.