இந்தியாவின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்; ஷிகர் தவான் விளக்கம்!

இந்தியாவின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்; ஷிகர் தவான் விளக்கம்!


Dhawan's Reason for india's loss

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. பனி பொழிவினை தவறாக கனித்ததே இதற்கு காரணம் என தவான் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் 32 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

cricket

ராஞ்சி மற்றும் மொகாலியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்றாவது போட்டியில் பந்துவீச்சையும் நான்காவது போட்டியில் பேட்டிங்கையும் தேர்வு செய்தார். இருப்பினும் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது.

இந்த தோல்விகள் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் தவான், " ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் பணி பொழியவில்லை. எனவே அன்று ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாகி விட்டது.

cricket

அதே சமயத்தில் மொகாலியில் நடைபெற்ற நான்காவது போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் பனிப்பொழிவு இருக்காது என எதிர்பார்த்து இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அன்று எதிர்பார்ப்பிற்கு மாறாக அதிகமான பனிப்பொழிவு இருந்ததனால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவே இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற காரணம்" என தவான் தெரிவித்துள்ளார்.