அந்த வீரரா இப்படி? தொடர்ந்து சொதப்பும் முக்கிய வீரர். கவலையில் ரசிகர்கள்.

அந்த வீரரா இப்படி? தொடர்ந்து சொதப்பும் முக்கிய வீரர். கவலையில் ரசிகர்கள்.


Dhawan bad form in west indies tour

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப்பயண ஆட்டத்தில் இந்திய அணி T20 போட்டிகளை 3 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனை அடுத்து முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய தவான் வெஸ்டிண்டிஸ் அணியுடனான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை நடந்த அணைத்து போட்டிகளிலும் தவான் மிகவும் சொதப்பலாகவே ஆடிவருகிறார்.

cricket

டி20 தொடரிலும் 1, 23, 3 ஓட்டங்கள் என அவர் மோசமாக ஆடினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். தவானின் இந்த மோசமான ஆட்டம் இந்திய கிரிக்கெட் வாரியாதையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அடுத்ததாக நடக்க இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தவான் சிறப்பாக விளையாடவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.