4-வது இடத்தில் பெங்களூரு அணியா..? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியா.? முடிவு கட்டும் டெல்லி அணி.!

4-வது இடத்தில் பெங்களூரு அணியா..? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியா.? முடிவு கட்டும் டெல்லி அணி.!


delhi vs srh match today

15வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இன்று  50வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. லீக் ஆட்டத்தில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

எனவே இன்று டெல்லியுடன் நடக்கும் ஆட்டத்தில் வென்று நான்காவது இடத்திற்கு முன்னேற ஹைதராபாத் அணி தீவிர முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் டெல்லி மற்றும் ஹைதராபா அணிகளுக்கு இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.