ஒலிம்பிக் வில்வித்தையில் தீபிகா குமாரியின் திரில் ஆட்டம்.! காலிறுதிக்கு தகுதி.!!

ஒலிம்பிக் வில்வித்தையில் தீபிகா குமாரியின் திரில் ஆட்டம்.! காலிறுதிக்கு தகுதி.!!


Deepika Kumari qualified quarter final

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் 8-வது நாளான இன்று ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் தீபிகா குமாரியும் ரஷ்ய ஒலிம்பிக் கமி்ட்டியின் பெரோவா மோதினர். 

இதில் முதல் சுற்றை 28-25 என்ற புள்ளி கணக்கில் தீபிகா கைப்பற்றினார். அதன்பின் இரண்டாவது சுற்றை 26-27 என்ற புள்ளி கணக்கில் பெரோவா கைப்பற்றினார். பின்னர் மீண்டும் மூன்றாவது சுற்றை 28-27 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி கைப்பற்றினார். இந்த நிலையில் நான்காவது சுற்று 26-26 என்ற புள்ளி கணக்கில் டை ஆனது.

Deepika Kumari

இதனனையடுத்து ஐந்தாவது சுற்றை 28-25 என்ற புள்ளி கணக்கில் தீபிகா கைப்பற்றினார். இறுதியில் தீபிகா 10 புள்ளிகள் எடுக்க பெரோவா வெறும் 7 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். இதனால் தீபிகா குமாரி எளிதாக 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.