சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்.. ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைவு?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரின் மனைவி ரிவாபா ஜடேஜா, குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் ஆவார். ஆனால், தற்போது வரை ஜடேஜா மட்டும் அரசியலில் நுழையாமல் இருந்தார்.
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா அதிகாரபூர்வமாக தன்னை பாஜகவில் இணைக்கவுள்ளார். இந்த தகவலை அவரின் மனைவியும் உறுதி செய்துள்ளதாக தெரியவருகிறது.
சமீபத்தில் ஜடேஜா சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது அவர் பாஜகவில் இணைகிறார்.
அதேநேரத்தில், பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை விவகாரத்தில் தோல்வியை தழுவி, தகுதி நீக்கம் செய்யப்பட்டு தாயகம் திரும்பிய வினேஷ் போகத், ராகுல் காந்தியை நேரில் சந்தித்து காங்கிரசில் இணைந்து அரசியலில் களமிறங்குவுள்ளதாகவும் கூறப்படுகிறது.