சென்னை அணி முதல் வெற்றி.. கேப்டன் ஜடேஜா யாருக்கு அர்ப்பணித்தார் தெரியுமா?.. அசத்தல் அறிவிப்பு.!
நான் கேப்டன் ஆனதற்கு பின்னர் கிடைத்த முதல் வெற்றியை எனது மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் என ஜடேஜா தெரிவித்தார்.
2022 ஐ.பி.எல் தொடரின் 22-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 216 ரன்களை குவிந்திருந்தது.
சென்னை அணியில் உத்தப்பா 88 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிவம் 95 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதைத்தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் தொடர் தோல்விகளுக்கு பின்னர் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த விஷயம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பேசுகையில், "கேப்டனான பின்னர் முதல் வெற்றி என்பது சிறப்பாக இருக்கும். எங்களது அணியின் முதல் வெற்றியை என் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன். நாங்கள் மீண்டும் ஒரு குழுவாக இணைத்து சிறப்பாக விளையாடியுள்ளோம். நான் தினமும் கற்றுக்கொண்டு நல்ல ஆட்டத்தினை விளையாட முயற்சிக்கிறேன்" என்று தெரிவித்தார்.