
தனது காதலியின் புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் சென
தனது காதலியின் புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் சென்னை அணி வீரர் சாம் கர்ரன்.
சென்னை அணிக்காக கடந்த 2 சீசன்களாக மிக சிறப்பாக விளையாடிவருகிறார் இங்கிலாந்து அணியை சேர்ந்த இளம் வீரர் சாம் கர்ரன். பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணிக்கு மிக பக்க பலமாக இருந்துள்ளார் சாம் கர்ரன்.
நடப்பு ஐபில் போட்டிகளில் விளையாடிவந்த இவர், ஐபில் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கே சென்றுவிட்டார். ஆனால் கொரோனா முன்னெச்செரிக்கை காரணமாக அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 22 வயதேயான சாம் கர்ரன், தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தினை கூறியுள்ளார். "என்னால் உனதருகில் இருக்க முடியவில்லை. இன்றைய நாள், உனக்கு அற்புதமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். உன்னை விரைவில் சந்திக்க ஆவலாக உள்ளேன்". என குறிப்பிட்டு தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் சாம் கர்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
Advertisement
Advertisement