விளையாட்டு

சிஎஸ்கேவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி.. ஹர்பஜன் சிங் விலகலா?

Summary:

Csk doubt on harbajan leaves from ipl

ஐபிஎல் 2020 யிலிருந்து சூழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்பஜன் சிங் தனது சொந்த காரணங்களினால் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணியில் இதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னாவுக்கும் சிஎஸ்கேவுக்கும் மோதல் ஏற்பட்டதில் அவரும் விலகுவதாக அறிவித்து நாடு திரும்பினார். தற்போது அதனை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் விலகுவதாக தகவல் வெளியானது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 13 வீரர்களுக்கு கொரோனா பாசிடிவ் என்று வந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில் ஹர்பஜன் சிங் இல்லாவிட்டாலும் கூட சிஎஸ்கே அணியில் பியூஷ் சாவ்லா, மிட்செல் சாண்ட்னர், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர் என கூறியுள்ளார். 


Advertisement