சினிமா விளையாட்டு

மிகவும் வேதனை அளிக்கிறது! சோகத்துடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் போட்ட ட்விட்!

Summary:

Cricketer aswin twit about Rip actor vijay

சமூக வலைத்தளங்களில் பல்வேறு நேரங்களில் பலவிதமான டாக் திடீரென ட்ரெண்டாவது வழக்கம். சமீபத்தில் கூட PrayForNesamani என்ற டாக் திடீரென ட்ரெண்டானது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு எதிராக ஒருசிலர் RipActorVijay என்ற டாக்கை உருவாக்கி அதனை ட்ரெண்ட் செய்தனர்.

பொதுவாக அஜித் படம் வெளிவரும்போது விஜய் ரசிகர்கள் இதுபோன்று கலாய்ப்பதும், விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் இப்படி கலாய்ப்பதும் வழக்கமாக நடந்துவரும் ஒன்றுதான்.

இந்நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழருமான ரவிச்சந்திரன் அஸ்வின் வேதனை தெரிவித்து ஒரு டிவிட்டர் பதிவு செய்துள்ளார். அதில், சில நாட்களுக்கு முன் ஒரு கோல் நமது கிரகத்தை தாக்க இருந்தது, பல கிரிமினல் குற்றங்கள் நாளுக்கு நாள் நடைபெறுகிறது, இப்படி எந்த விஷயத்தை பேசாமல் இந்த தலைமுறையின் இளைஞர்கள் இப்படி ஒரு டாக்கை டிரண்ட் செய்கிறார்கள் என சோகமான பதிவை போட்டுள்ளார். 


Advertisement