மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
முதல் முறையாக வெளியான கிரிக்கெட் வீரர் தவானின் அழகான மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் மிகவும் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். 1985 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பகாலத்தில் டெல்லி உள்ளூர் அணிக்காக விளையாடிவந்தார். அதன்பின்னர் 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி புகழ்பெற்றார் தவான்.
தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கும்போது விக்கெட் கீப்பராக பயிற்சியை தொடர்ந்த தவான் அதன்பின்னர் முழுநேர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அதனபின்னர் இந்திய அணிக்கான தனது முதல் ஒருநாள் போட்டியை ஆத்ரேலியா அணிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு விளையாடினார் தவான்.
2010 முதல் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை போட்டி வரை இந்திய அணிக்காக தவான் விளையாடிவருகிறார். இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை நான்கு வருடங்கள் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் தவான்.
இவர்களது திருமணத்திற்கு முன்பே ஆயிஷா ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாய். அதன்பின்னர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தவானை திருமணம் செய்துகொண்டார் ஆயிஷா. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதுவரை அதிகம் வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.