விளையாட்டு

சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ்!

Summary:

Corono negative for csk players and staffs

ஐபிஎல் 2020 தொடருக்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் இருவர் உட்பட 13 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் குவாரண்டைனில் உள்ளனர்.

இதனால் இதுவரை சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நேற்று மீண்டும் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இருப்பினும் அனைவருக்கும் மீண்டும் செப்டம்பர் 3 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதில் யாருக்கும் கொரோனா பாஸிட்டிவ் இல்லையென்றால் மட்டுமே சென்னை வீரர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் பயிற்சி மேற்கொள்வர்.

இதற்கு முன்னர் நடந்த சோதனையில் கொரோனா உறுதியான தீபக் சாகர் மற்றும் ருத்துராஜ் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை குவாரண்டைனில் தான் இருப்பர். தென்னாப்பிரிக்கா வீரர்களான டூப்ளஸிஸ் மற்றும் நிகிடி துபாய்க்கு சென்றுவிட்டனர்.


Advertisement