தனி ஆளாக போராடி சென்னை அணியின் மானத்தை காப்பாற்றிய சாம் கரண்! மும்பை அணிக்கு மிக எளிதான இலக்கு

தனி ஆளாக போராடி சென்னை அணியின் மானத்தை காப்பாற்றிய சாம் கரண்! மும்பை அணிக்கு மிக எளிதான இலக்கு


Chennai vs Mumbai sam curran saved csk

தனி ஆளாக போராடி சென்னை அணியின் ரன் எண்ணிக்கையை 100 ஐ தாண்ட வைத்துள்ளார் சாம் கரண்.

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றுவரும் போட்டியில் சென்னை அணி மிக மோசமாக விளையாடியுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

தொடக்க வீரராக களமிறங்கிய ருத்ராஜ் முதல் ஓவரில்லையே ஆட்டம் இழக்க, அவரை தொடர்ந்து ராய்டு, டுப்ளசிஸ், ஜெகதீசன், ஜடேஜா, தோனி, சாகர் என அனைவரும் ஆட்டம் இழந்தனர். தனி ஆளாக சாம் கரண் மட்டும் நிதானமாக ஆடி சென்னை அணியின் எண்ணிக்கை 100 ஐ கடக்க உதவினார்.

csk

சாம் காரனும் இடையிலையே ஆட்டம் இழந்திருந்தால் சென்னை அணி 70 ரன்களை தாண்டியிருப்பதே கடினம். இறுதியில் 20 வது ஓவர் வரை விளையாடிய சாம் கரண் கடைசி பந்தில் ஆட்டம் இழந்த நிலையில் மொத்தம் 47 பந்துகளில் 52 ரன்கள் அடித்து சென்னை அணியின் எண்ணிக்கையை 114 ஆக உயர்த்தினார்.

சாம் கரனுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய இம்ரான் தாஹிர் 10 பந்துகளில் 13 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்துள்ளது. 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.