Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட் இதோ.!



  Champions Trophy 2025 Team India Squad 

மினி உலக கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டி, வரும் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட 8 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. 

2025 சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு வராது என உறுதியாக இருந்தது. இதனால் ஐசிசி நிர்வாகம் பாகிஸ்தான் தவிர்த்து பிற நாடுகள் பங்கேரும் போட்டிகளை பாகிஸ்தானிலும், இந்தியா பங்கேற்கும் போட்டியை அமீரகத்தில் நடத்த ஒத்துழைத்தது. 

வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கவுள்ள போட்டிகளை முன்னிட்டு, இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஸுப்மன் ஹில்லும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் விராட் கோலி, 

எஸ்.ஐயர், 

கே.எல் ராகுல், 

எச். பாண்டியா,

ஏ.படேல், 

வாஷிங்க்டன் சுந்தர், 

கே. யாதவ், 

ஜெ. பும்ரா, 

எம். சமி, 

ஏ. சிங், 

ஒய். ஜெய்ஷ்வால், 

ஆர். பண்ட், 

ஆர். ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.